தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையத்தில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் புரட்சித்தலைவி அம்மாவுமான செல்வி ஜெ. ஜெயலாலிதா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. நினைவேந்தல் நிகழ்ச்சியில், அம்மாவின் படத்திற்குப் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பலரும் பங்கேற்று முன்னாள் முதலமைச்சரின் சேவைகள் மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்தனர்.
நிகழ்வில் கிளை செயலாளர் திருஞானம், பரிசித், பழனிசாமி, கோவிந்தசாமி, ஆறுமுகம், வியாபாரி பழனிசாமி, திருமால், அண்ணாமலை, இராமன், முத்துசாமி, குருநாதன், சாமிதுரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி நிறைவில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)