திட்டம் எப்படி செயல்படுகிறது?
-
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதல் 48 மணி நேரத்திற்கு முழுக்கட்டணமில்லா அவசர சிகிச்சை
-
சிகிச்சை அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும்
-
48 மணி நேரத்திற்குப் பிறகும் நோயாளி “நிலையற்றவர் (Unstable)” என்ற நிலையில் இருந்தால்:
-
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) உள்ளவர்கள்—அதே மருத்துவமனையில் தொடர்ந்துச் சிகிச்சை
-
காப்பீடு இல்லாதவர்கள்—அரசு மருத்துவமனைக்கு மாற்றி இலவச சிகிச்சை
-
தருமபுரி மாவட்டத்தில் மருத்துவமனைகள்
திட்டத்தின் கீழ்:
-
5 அரசு மருத்துவமனைகள்
-
7 தனியார் மருத்துவமனைகள்
அங்கீகரிக்கப்பட்டு விபத்து பாதித்தவர்களுக்கு அவசர சிகிச்சை வழங்கி வருகின்றன.
7,427 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை
திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை, தருமபுரி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய 7,427 நபர்கள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் நெருக்கடியான சூழலில் உடனடி சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)