சம்பவம் எப்படி நடந்தது?
2025 டிசம்பர் 02 ஆம் தேதி, கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை இயக்குநர் ருபேஷ் குமார் மீனா, IPS அவர்களின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஈரோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி தலைமையில், கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளர் சிவனேஸ்வரன், உதவி ஆய்வாளர் யாசர் மௌலானா, சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் சுரேஷ் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்நேரத்தில் தருமபுரி – பென்னாகரம் சாலையில் உள்ள ஓம் சக்தி பார்க்கிங் யார்டில் சந்தேகத்துக்கிடமான லாரி ஒன்று (TN 34 V 4487) நிறுத்தப்பட்டிருந்தது. சோதனை செய்தபோது, லாரியில் தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி 600 மூட்டைகளில் மொத்தம் 30 டன் இருப்பது கண்டறியப்பட்டது.
ஒருவர் கைது – வாகனம் மற்றும் அரிசி பறிமுதல்
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது
ரேஷன் அரிசி எங்கு இருந்து எவ்வாறு கடத்தப்பட்டது, இதில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் என்பதற்கான விசாரணை தருமபுரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

.jpg)