நல்லம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிசக்தி மேல்மாரியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஆன்மிக நன்மை பெற்றனர். கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக நவகிரக ஹோமம், கணபதி ஹோமம், காப்புக்கட்டுதல், தீர்த்தக்குடம், முலைப்பாளிகை அழைப்பு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முதல்கால யாகம் மற்றும் தீபாராதனை நடைப்பெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, கணபதி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர், சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கோபுரக் கலசங்களுக்கு ஏற்றப்பட்டது. இதன் மூலம் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தீர்த்தமாக தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி எல்லா பக்தர்களுக்கும் விழா குழுவினரின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

.jpg)
.jpg)
.jpg)