தருமபுரியில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டிகளில் கைப்பந்து, ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் நடத்தப்பட்டன. பல இடங்களைச் சேர்ந்த இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
நிகழ்வில் மை பாரத் துணை இயக்குனர் பிரவீன் சார்லஸ்டன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி சிலம்பரசன், துரை, பெருமாள், நேதாஜி, முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி பாராட்டினர்.

.jpg)