தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் திருப்பணிகள் திட்டம், முப்பால் பயிற்றுநர் மன்றத்தாரால் இன்று (28.11.2025) பிற்பகல் 2.00 மணிக்கு மொரப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு பள்ளி உதவியாசிரியர் சதீஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பு.கு. இராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார். அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களின் பொறுப்பாளர் பாவலர் கோ. மலர்வண்ணன் அவர்கள் நோக்கவுரையை ஆற்றினார்.
உழவுக்கவிஞர் பொ. பொன்னுரங்கன், த. விஷ்ணு பிரசாத், ஆகியோர் மாணவிகளுக்கு திருக்குறள் பற்றிய பயிற்சிகளை வழங்கினர். மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திருக்குறள் அடிப்படைகளையும் பயிற்சிகளையும் பெற்றனர். நிகழ்ச்சியினை ஒட்டி நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிவில் செ. சுமதி அவர்கள் நன்றி நவில, திருக்குறள் பயிற்சி நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

.jpg)