Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் – 379 மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி, டிசம்பர் 01:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 379 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது.


மாணவரின் அறிவியல் சாதனைக்கு பாராட்டு

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற INSPIRE MANAK AWARD மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் கோ. விக்னேஷ் நிகழ்த்திய “Leg Operated Mouse” என்ற புத்தாக்க அறிவியல் முயற்சி மாநில அளவில் தேர்ச்சி பெற்றது. மாணவர் இன்று தனது விருதினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.


பொதுமக்கள் கோரிக்கைகள்

இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு துறைகளுக்கு உட்பட்ட கோரிக்கைகள் அளித்தனர். அவை முக்கியமாக —

  • சாலை, குடிநீர், பேருந்து போன்ற அடிப்படை வசதிகள்

  • பட்டா வழங்குதல், சிட்டா பெயர் மாற்றம்

  • புதிய குடும்பஅட்டை

  • வாரிசுச்சான்றிதழ்

  • முதியோர் ஓய்வூதியம்

  • இலவச வீட்டுமனை

  • வேலைவாய்ப்பு கோரிக்கைகள்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள்

மொத்தம் 379 மனுக்கள் இன்று பதிவு செய்யப்பட்டன.


விழிப்புணர்வு – விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்:

“மாண்புமிகு முதல்வர் பொதுமக்களின் மனுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அரசின் விதிமுறைகளின் படி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” 

என தெரிவித்தார்.


அரசு அதிகாரிகள் பங்கேற்பு

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ். மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திரு. சந்தரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, ட்பட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies