Type Here to Get Search Results !

பாலக்கோடு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் – டிராப்பிக் போலீஸ் கட்டுப்பாடு இன்றி வாகன ஓட்டிகள் அவதி.


பாலக்கோடு, டிச. 02 :

பாலக்கோடு நகரில் கடந்த சில நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. நகரின் முக்கிய சாலைகளில் டிராப்பிக் போலீசார் கண்காணிப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓசூர், அஞ்செட்டி, மாரண்டஹள்ளி, பெங்களூர், சேலம், கோவை, பழனி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தொடர்ந்து இயக்கப்படுவதால் நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இதனுடன், நகரில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் முன்பாக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் சாலை பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, வாகனங்கள் கேணல் வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பள்ளி வாகனங்கள் வரும் நேரங்களில் நெரிசல் மேலும் அதிகரித்து, போக்குவரத்து மணிக்கணக்கில் பாதிக்கப்படுகிறது. இதனால் அவசர ஊர்திகள் விரைவாக நகர முடியாத சூழலும் உருவாகியுள்ளது.


நகரில் போக்குவரத்து காவலர்கள் குறைவாக உள்ளதாலும், முக்கிய சந்திப்புகள் மற்றும் நெரிசல் பகுதிகளில் கண்காணிப்பு இல்லாததாலும் தினசரி போக்குவரத்து நெரிசல் தீராத சிக்கலாகியுள்ளது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகள் மற்றும் டிராப்பிக் போலீசாரின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies