தருமபுரி, டிச.23:
ஐயா கக்கன் அவர்களின் 44-வது நினைவு நாளை முன்னிட்டு, தருமபுரி அடுத்த பிடமனேரியில் உள்ள கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கக்கன்ஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கக்கன் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கமலக்கண்ணன், பாவல் ராஜ், கபில்தேவ், சிவா, விஜயன், செந்தில், பிரவீன், முனியப்பன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தியாகி கக்கன்ஜியின் நேர்மை, எளிமை மற்றும் மக்கள் பணியை நினைவுகூர்ந்தனர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள், காவல்துறை மற்றும் விவசாயத் துறை அமைச்சராக உயரிய பொறுப்புகளில் இருந்தபோதும், தனக்கென சொத்துக்களை சேர்க்காமல், சாமானிய வாழ்க்கை வாழ்ந்து மறைந்த கக்கன்ஜி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம் எனக் குறிப்பிட்டனர். அரசு மருத்துவமனையில் சாதாரண கட்டிலில் சிகிச்சை பெற்ற அவரது வாழ்க்கை முறையே அவரது நேர்மைக்கு சான்று என்றும் தெரிவித்தனர்.
எளிமையும் தியாகமும் கலந்த அவரது வாழ்வை வருங்கால தலைமுறைகள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

.jpg)