Type Here to Get Search Results !

தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” – பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.


தருமபுரி, டிச.23:

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தருமபுரி மேற்கு ஒன்றியத்தின் சார்பில், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாந்தோப்பில் அமைந்துள்ள 94 மற்றும் 95 ஆம் வாக்குச் சாவடிகளுக்கான “என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி” பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் டி. எல். காவேரி தலைமை வகித்தார்.


கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி (முன்னாள் எம்.எல்.ஏ) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். தமிழக அரசின் நான்கரை ஆண்டு சாதனைகளான மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கி பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், ஆர்.கே. முகமது, பொருளாளர் தண்டபாணி, BLA-2 செல்வராஜ், சாந்தி, சரவணன், கிளைச் செயலாளர்கள் எல். ஜெயராமன், நடராஜன், இளைஞர் அணி சதீஷ், முன்னாள் வார்டு உறுப்பினர் தமிழ், முருகேசன் (அமைப்புசாரா ஓட்டுநர் அணி), பெருமாள் (துணை இலக்கிய பகுத்தறிவு பேரவை), வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


பூத் அளவில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி, அரசின் சாதனைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies