Type Here to Get Search Results !

இண்டூரில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44-வது புதிய கிளை தொடக்கம்.


தருமபுரி | டிசம்பர் 29:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூரில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44-வது புதிய கிளை இன்று (29.12.2025) தொடங்கப்பட்டது. இந்த புதிய கிளையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.


தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வருவதாகவும், தருமபுரி–பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள இண்டூர் பகுதியில் புதிய கிளை தொடங்குவதற்காக கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளரிடமிருந்து முன் அனுமதி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிமம் பெறப்பட்டு இந்த கிளை இன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இண்டூரிலிருந்து பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த கிளை, பாதுகாப்பு பெட்டகங்கள், பாதுகாப்பு கதவுகள், வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் செயல்பட உள்ளது.


இந்த கிளை துவங்குவதன் மூலம், இண்டூர் பகுதி மக்கள் மற்றும் இக்கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள 4 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெறுவார்கள். மேலும், இது தருமபுரி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் 44-வது கிளையாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, இண்டூர் புதிய கிளையின் வாடிக்கையாளர்களுக்கு வைப்பு தொகை ரசீதுகள் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படும் கடன்கள் மற்றும் சேவைகளை முழுமையாக பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பென்னாகரம் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. வீரமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி எஸ். மலர்விழி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. வி. இரவி, தருமபுரி சரகம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் திருமதி ந. விஷ்ணுபிரியா, வங்கியின் பொது மேலாளர் திரு. கருணாகரன் உள்ளிட்ட அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies