ஒகேனக்கல், டிசம்பர் 20:
ஒகேனக்கல் பகுதியில், இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் (MY Bharat) தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகங்கள் சார்பில், வருங்கால இளைய தலைவர்களின் முகாம் டிசம்பர் 16 முதல் 18 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த முகாமில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 இளைஞர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 இளைஞர்களும் கலந்து கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
முகாமின் துவக்க விழாவில் ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் ஆனந்த், அங்காளம்மன் பாரமெடிக்கள் கல்லூரி இயக்குநர் சிலம்பரசன், முதல்வர் துரை, ஹர்ட்புல்னஸ் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நிதிலகுமார் மற்றும் ரகுநாத், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மற்றும் மை பாரத் தருமபுரி–கிருஷ்ணகிரி துணை இயக்குநர் ட்ரவீன் சார்லஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்குவித்தனர்.
இந்த முகாமில் இளைஞர்களுக்கு தேவையான ஆளுமைத் திறன், தகவல் தொடர்புத் திறன், தலைமைப் பண்பு, நிதி நிர்வாகத் திறன், தொழில் நெறி வழிகாட்டுதல், இளையோர் பாராளுமன்றம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி, இளைஞர்களை வருங்கால தலைவர்களாக உருவாக்கும் நோக்கில் முக்கியமான அடித்தளமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

.jpg)