தருமபுரி, டிசம்பர் 21:
தருமபுரியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தருமபுரி மாவட்ட மின் பகிர்மான அலுவலக வளாகம் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர், சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த கோவில் 1974 ஆம் ஆண்டு மின் பகிர்மான அலுவலக கட்டுமானப் பணியின் போது ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வே. முத்தம்பட்டி, நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இத்திருக்கோவிலிலும் சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வழிகளின் மூலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கோவில்களிலும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

.jpg)