பென்னாகரம், டிச. 25:
அப்போது, ஒகேனக்கல் கணவாய் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மேல் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது வளைவில், முன்னால் சென்ற தனியார் சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சிறிய தடுப்பின் மீது ஏறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்திருந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்தினால் கணவாய் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்த வாகனங்கள் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்தன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து ஒகேனக்கல் காவல் நிலையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.jpg)