தருமபுரி, டிச. 24:
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், இன்று 24.12.2025 காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன், B.Com., BL., அவர்களின் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது.
இந்த முகாமில், மாவட்ட குற்ற அவணக் காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. R. குணவர்மன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர். முகாமின் போது பொதுமக்களால் முன்பு வழங்கப்பட்ட 85 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும், இன்றைய முகாமில் பொதுமக்களிடமிருந்து புதிதாக 32 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து விரைவான தீர்வு வழங்கும் வகையில் இந்தப் பெட்டிஷன் மேளா பயனுள்ளதாக அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

.jpg)