தருமபுரி, டிசம்பர் 23:
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில், திமுக வழக்கறிஞர் அணி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி, எம்.பி., கலந்து கொண்டு, கழகத்தின் ஆக்கப்பூர்வ பணிகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார்.
கூட்டத்தின் போது, கட்சியின் கொள்கைகளை சட்டப்பாதையில் பாதுகாப்பது, அரசின் மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வழக்கறிஞர் அணியின் பங்கு, தேர்தல் காலங்களில் சட்ட ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தேர்தல் பார்வையாளர்கள் டி. செங்குட்டுவன், பாரி, தருமபுரி நகர கழக செயலாளர் எம்.பி. கௌதம், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பி.கே. தாஸ், ஆர். சிவம் உள்ளிட்ட வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
கட்சியின் சட்டவிரோத எதிர்ப்புகளை சட்டபூர்வமாக எதிர்கொள்ளவும், ஜனநாயக மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வலுப்படுத்தவும் வழக்கறிஞர் அணியின் பங்கு முக்கியமானது என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

.jpg)