அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “தாய்மாமன் தங்க மோதிரம்” திட்டம் தொடங்குவதற்கான முன்னேற்பாடுப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி, பொதுமக்கள் காத்திருக்கும் அறை மற்றும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது. இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ச. முத்துக்குமாரசுவாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஐ. ஜோதி சந்திரா, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் டி.எம். மனோகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் என். சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் மருத்துவர் நாகேந்திரன், துணை முதல்வர் மருத்துவர் டி.ஏ. சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுமதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

