தருமபுரி – டிசம்பர் 31
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தருமபுரி கோட்டையில் உள்ள ஸ்ரீ பரம வாசுதேவ சுவாமி திருக்கோவில்-இல் சுவாமி தங்க கவச அலங்காரத்திலும், கடை வீதியில் உள்ள ஸ்ரீ வெங்கட ரமண சுவாமி கோவில்-இல் சிறப்பு கலங்கரத்திலும், செட்டிகரையில் உள்ள ஸ்ரீ வெங்கட ரமண சுவாமி கோவில்-இல் சந்தன காப்பிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதேபோல், அக்கமணஅள்ளியில் உள்ள ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவில், மணியம்பாடியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் சுவாமிகள் தங்க கவச அலங்காரத்திலும், இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனாகிய நித்திய கல்யாண வெங்கடேஸ்வரா பெருமாள் கோவில்-இல் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகங்கள் சார்பில் ஒழுங்கமைக்கப்பட்ட வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சி, தருமபுரி மாவட்டத்தில் ஆன்மிக உற்சாகத்தையும் பக்தி சூழலையும் மேலும் அதிகரித்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

.jpg)