தருமபுரி – டிசம்பர் 31
தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வி தூய்மை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வி தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் எம். சுப்பு தலைமை தாங்கினார். சங்க மாவட்ட பொருளாளர் ஆர். எல்லம்மாள், அ. ஆஞ்சலா, எம். மீனாட்சி, ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் கே. இரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெ. பிரதாபன், வெ. பை. மாதையன், அனிதா, எப்.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜி. மாதையன், இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜி. பச்சாகவுண்டர் மற்றும் என்.பி. ராஜி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சரஸ்வதி, மேனகா, ஜெயமதி, மாதம்மாள், ரேணுகா, ராஜேஷ், மகேஷ், ராமாயி, அஞ்சலா, ஆனந்தி, கவிதா, வள்ளி, சந்திரா, சுசிலா, சக்திவேல், காயத்திரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி தூய்மை பணியாளர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
முக்கிய கோரிக்கைகள்:
-
பள்ளி தூய்மை பணியாளர்களின் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
-
தினசரி வருகை பதிவேட்டில் பணியாளர்களிடமிருந்து கையொப்பம் பெற வேண்டும்.
-
ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படுவது போல் சீருடை, முககவசம், பாதுகாப்பு உபகரணங்கள் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
-
குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி ரூ.12,503 (₹6,000 + ₹6,503) ஊதியம் வழங்க வேண்டும்.
-
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
-
பள்ளி தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.

.jpg)