தருமபுரி – டிசம்பர் 06
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்ட ஆயத்தக் கூட்டம், தருமபுரி செங்கொடி புரத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர். சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்றோரின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய கோரிக்கைகள்
மாவட்ட செயலாளர் ஜி. பி. விஜயன், மாவட்ட பொருளாளர் எம். சின்னசாமி, துணை செயலாளர் எம். துரைசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் சி. குப்புசாமி, பி. சுப்பிரமணியம், இணை செயலாளர் ரகுபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
அவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
-
மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி பங்கீடு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குதல்.
-
42,000 ஆரம்ப நிலை பணியிடங்களில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள், ஐடிஐ பயிற்சி பெற்றோர், 5,000 கேங்மேன் பணியாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம்.
-
9,613 கேங்மேன்களை களஉதவியாளராக மாற்றுதல்.
-
அரசாணை எண் 100-ல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதகமான விதிகளில் மாற்றம்.
-
RTSS மூலமாக செயல்படுத்த முயலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மாற்றாக, கேரளாவை போல கேப்ஸ் முறை மூலம் அமலாக்கம்.
-
மின்வாரிய காலிப்பணியிடங்களில் Overseas Manpower மூலம் நியமனம் செய்யும் வாரிய உத்தரவை ரத்து செய்தல்.
-
மின்வாரியம் மறுசீரமைப்புப் பின்னணி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்தல்.
-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்குதல்.
-
01.12.2022 அன்று வெளியிடப்பட்ட வாரிய ஆணை எண் 192 அடிப்படையில் மருத்துவ செலவு மீட்புத் தொகை வழங்குதல்.
டிசம்பர் 18 போராட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பு தீர்மானம்
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)