Type Here to Get Search Results !

மதுபான காளி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்ற கோரி தருமபுரியில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி – டிசம்பர் 05 :

தருமபுரி அருகே தடங்கம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு, மதுபான காளி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முறைப்படுத்தவும், டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்க்கவும் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியவர்கள்

  • துணை செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர்கள் சிவாஜி, ரங்கநாதன், அர்ஜுனன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.


முக்கிய கோரிக்கைகள்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள்:

  • காளி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தாமல்,
    மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

  • பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
    இதுகுறித்த உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

  • ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

  • கடைகளில் கையிருப்பு தொகையை அதிகரிக்க வேண்டும்.

  • கூடுதல் பணி செய்யும் ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும்.

  • காளி பாட்டில் திரும்பப் பெறும் பணிக்கு ஒப்பந்த நபர்களை நியமிக்க வேண்டும்.

நிகழ்வில் கலந்து கொண்டோர்

கேசவன், செல்வம், ஜெயவேல் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
முருகையன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்று,
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Permalink:

dharmapuri-tasmac-workers-protest-empty-bottle-return-scheme

© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies