தருமபுரி – டிசம்பர் 05 :
தருமபுரி நகர அதிமுக சார்பில், தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் மற்றும் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி தலைமையில், ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்சாற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் அசோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, நகர துணை செயலாளர் அறிவொளி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல இணைச் செயலாளர் பிரசாத், நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி சுரேஷ், முன்னாள் கூட்டுறவு பண்டக் சாலை இயக்குநர் மாதேஷ், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், வார்டு செயலாளர் வடிவேல், அர்ஜுனன், ஹீரோ ஹோண்டா விஜய், மாணவரணி செந்தில், அம்மா அணி வடிவேல் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்று முன்னாள் தலைவரின் திருஉருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)