தருமபுரி | டிசம்பர் 31
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று 31.12.2025 காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை, பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இந்த முகாமிற்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. Maheswaran, B.Com., BL., அவர்கள் தலைமை தாங்கினார். உடன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) K. Sridharan, காவல் துணைக் கண்காணிப்பாளர் Ramamoorthy (IUCAW), காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் அளிக்கப்பட்ட 53 மனுக்கள் மீது உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்து 53 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், இன்று புதிதாக 26 மனுக்கள் பெறப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான தீர்வு வழங்கும் நோக்கில், இதுபோன்ற குறை தீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

.jpg)