தருமபுரி மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு சங்கத்தின் அலுவகை வாகனம் TN 29 D 4252, பயன்பாட்டிற்கு இயலாத நிலையில் இருப்பதால் கழிவு நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த கழிவு செய்யப்பட்ட வாகனம் 12.12.2025 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12.00 மணிக்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3-வது தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் பொது ஏலத்திற்கு விடப்பட உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் நேரில் வந்து விலைப்புள்ளி வழங்கி ஏலத்தில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.

.jpg)