தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.00 மணி முதல் 14.00 மணி வரை பொதுமக்களின் குறைகளை நேரடியாக பெறவும், உடனடி தீர்வு காணவும் பெட்டிஷன் மேளா (குறை தீர்க்கும் முகாம்) நடத்தப்பட்டது. இந்த முகாம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. S. மகேஸ்வரன், B.Com., B.L., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதிகாரிகள் பங்கேற்பு
முகாமில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) திரு. K. ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனுக்கள் – பெறல் மற்றும் தீர்வு
இன்றைய முகாமில் பொதுமக்கள் அளித்த மொத்த 49 மனுக்களுக்கு உடனடி விசாரணை செய்யப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் புதியதாக 37 மனுக்கள் பெறப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. காவல் துறையின் இந்த நேரடி குறைதீர்க்கும் முகாம் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, குறைகளை விரைவாகத் தீர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)