தருமபுரி மாவட்டமும், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12.12.2025 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாயி சங்க பிரதிநிதிகள் கண்டிப்பாக கலந்து கொண்டு தங்கள் குறைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா. காயத்ரி அறிவித்துள்ளார்.

.jpg)