தருமபுரி, டிச.24:
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) அவர்களின் பயன்பாட்டில் இருந்த ஈப்பு வாகனம் (TN 09 G 1289) முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட மேற்படி வாகனம், 29.12.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணியளவில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3-வது தளம், இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் நேரில் கலந்து கொண்டு விலைப்புள்ளி (Bid) கோரலாம் என திரு. ரெ. சதீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

.jpg)