தருமபுரி | டிசம்பர் 29:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட இண்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்ததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் அவர்களிடம் புகார் தெரிவித்தனர். அவர் ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியும், குப்பை அகற்றப்படாததால், நேரடியாக களத்தில் இறங்கினார். இதையடுத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து, இண்டூர் பகுதியில் குவிந்திருந்த குப்பை கழிவுகளை நேரில் அகற்றும் பணியில் ஈடுபட்டார். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சுகாதார நிலை மேம்பட்டதாகவும், இனி இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

.jpg)