தருமபுரி, டிசம்பர் 04:
தருமபுரி கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய ஸ்ரீ மருதவாணேஸ்வரர் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆன்மீக முறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு 03.12.2025 அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பரம்பரிய மரபின்படி பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீ மருதவாணேஸ்வரருக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்துடன் வெவ்வேறு விதமான பூஜைகள் நடைபெற்றன. மாலை நேரத்தில் கோயிலில் மகா நெய் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவிழாவின் தொடர்ச்சியாக 04.12.2025 மாலை, சுவாமி திருவீதியூலா நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினரும் கோயில் நிர்வாகமும் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)