தருமபுரி, டிசம்பர் 20:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் உடனிருந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் வழங்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்:
-
25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்
-
92 பழங்குடியினர் பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள்
-
06 காசநோயாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
-
25 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளர் அடையாள அட்டைகள்
-
10 நபர்களுக்கு கலைஞர் காப்பீடு திட்ட அட்டைகள்வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் 2025 வரை, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம், மொத்தம் 30 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமின் மூலம்:
-
அனைத்து வகையான முழு உடல் பரிசோதனைகள்
-
17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள்
-
ABHA Card (ஆபா கார்ட்) உருவாக்கம்
-
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் (CMCHIS) பதிவு
-
மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் வழங்கல்என பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல, நரம்பியல், நுரையீரல், நீரிழிவு, தோல், பல், கண், காது–மூக்கு–தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உளவியல் ஆலோசனை உள்ளிட்ட 17 வகை சிறப்பு சிகிச்சைகள் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகின்றன.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், இதய நோயாளிகள், படுக்கையுற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. கண்புரை நோயாளிகள், அறுவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். உயர் மருத்துவ சேவை முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

.jpg)