தருமபுரி, டிசம்பர் 03:
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மூலமாக கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் திறந்து வைக்க உள்ளதால், பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கத் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் ஏ.ரெட்டிஅள்ளி மற்றும் சோகத்தூர் பஞ்சாயத்து பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவில், ₹39.14 கோடி மதிப்பீட்டில் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்படுகின்றது. மாவட்டத்தில் அதிகரித்துவரும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நவீன அம்சங்களுடன் உருவாக்கப்படுகின்ற இந்தப் பேருந்து நிலையம், தருமபுரியின் முக்கிய உள்கட்டமைப்பு முன்னேற்ற திட்டங்களில் ஒன்றாகும்.
நிலையத்தில் அமைக்கப்படும் வசதிகள்
இந்த ஒருங்கிணைந்த நிலையத்தில்:
-
தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், உணவகங்கள், ATM மையம்
-
பயணிகளுக்கான சரக்கு பாதுகாப்பு அறை, ஓய்வு அறைகள்
-
ஆண்–பெண் கழிவறைகள், தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை
-
55 பேருந்துகள் நிறுத்தும் இடம், நடைபாதைகள்
-
பயணிகள் அமரும் பகுதிகளில் டைல்ஸ் பதிக்கும் பணிகள்
-
மழைநீர் வடிகால் மற்றும் பிரதான சாலை அமைப்பு
-
மேற்கூரை அமைக்கும் பணிகள்
ஆகிய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
திட்டத்தின் வரலாற்று பின்னணி
அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்பு
ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ். மகேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர் சி. க. ஜெயதேவ்ராஜ், நகராட்சி ஆணையாளர் சேகர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பி. அம்பிகா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)