Type Here to Get Search Results !

தருமபுரி–காரிமங்கலம் பேருந்து நேரத்தில் தாமதம்: பொதுமக்கள் வாக்குவாதம் – பேருந்து நிலையத்தில் பரபரப்பு.


தருமபுரி, டிசம்பர் 04:

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை, தருமபுரி–காரிமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்படும் நகர பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் பேருந்து தாமதத்தால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், நேரம் காப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆய்வாளரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சில நிமிடங்களுக்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்து நேரம் பின்பற்றப்படாததால் பணியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. சூழ்நிலையை சமாளிக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சி குறுகிய நேரத்தில் சமணிக்கப்பட்டதாலும், பயணிகள் வசதிக்காக பேருந்து நேரத்தை சரியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies