Type Here to Get Search Results !

தருமபுரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி – டிசம்பர் 06 :

பாபரி மஸ்ஜித் இடிப்பு நினைவு நாளான டிசம்பர் 6–ஐ முன்னிட்டு, தருமபுரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபேதார் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் பைரோஸ் வரவேற்புரை ஆற்றினார்.


நிகழ்ச்சியில் சனாவுல்லா – மாநில பொருளாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தடங்கம் சுப்பிரமணி – முன்னாள் மாவட்ட செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம், எக்பால், சுன்னத் ஜமாத் செயலாளர், பாபு – முத்தவல்லிகள் சங்க செயலாளர், பஜல் கரீம் – அரசு காஜி, ஷபீர் அஹமத், ஊமை ஜெயராமன் – திராவிடர் கழகத்தின் சார்பில் குமார், நந்தன், பாண்டியன் – விடுதலை சிறுத்தைகள் கட்சி, அன்வர்பாஷா, நியாஸ், இதாயத்துல்லா, நசீர் அஹமது, இர்பான்பாஷா, ஷாஜகான், இலியாஸ், முகமது ரஃபி, முஹம்மது சலீம், அஸ்லம், நசீப்ஜான், இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டே சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், மற்றும் அந்நாளின் அரசியல் விளைவுகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று கண்டனத்தை வெளிப்படுத்தினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies