Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கர் 70ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.


தருமபுரி – டிசம்பர் 06 :

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 70ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. தருமபுரி அரசு தலைமை மருத்துவமனை அருகிலுள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் அ. மணி எம்பி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


திமுக சார்பில் நகர கழக பொறுப்பாளர்கள்: நாட்டான் மாது, கௌதம், ஒன்றிய செயலாளர்கள்: காவேரி, சண்முகம், பெரியண்ணன், நிர்வாகிகள்: முல்லைவேந்தன், மாதேஸ்வரன், குமார், வெல்டிங் ராஜா, ரவி, ஜெகன், அன்பழகன், ராஜேந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர் அசோகன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் உதயசூரியன், திமுக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் அனைவரும் அம்பேத்கரின் சமூக நீதி, சமத்துவம், மனித உரிமைகள் குறித்து அவர் உருவாக்கிய வழிமுறைகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies