Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வரும் 29 டிசம்பர் 2025 முதல் 18 ஜனவரி 2026 வரை நடைபெறவுள்ளது.


தருமபுரி – டிசம்பர் 26

தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 3,45,500 பசு மற்றும் எருமை இன கால்நடைகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதற்காக, மத்திய அரசால் 3,52,050 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் தருமபுரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், 29.12.2025 முதல் 18.01.2026 வரை மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலம் இந்த தடுப்பூசி முழுமையாக இலவசமாக செலுத்தப்பட உள்ளது.


இந்த முகாம்களின் மூலம், மாவட்டத்தில் உள்ள 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கும் தடுப்பூசி போடப்படும். முகாம்களில் தவறவிடப்படும் கால்நடைகளுக்கு, 19.01.2026 முதல் 28.01.2026 வரை தனியாக தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் அல்லது கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை கால்நடை வளர்ப்போர் அணுகலாம். பொதுமக்கள் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 9445001113, 9443272060, 9443409346, 8144874747 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.


கால்நடை வளர்ப்போர் அனைவரும் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி, 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை இலவசமாக செலுத்தி பயன்பெற வேண்டும் என ரெ.சதீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies