Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.


தருமபுரி, டிச. 24:

இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகள் கடந்த 04.11.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் முதல்கட்டமான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.


இதனைத் தொடர்ந்து, 27.12.2025 (சனிக்கிழமை)28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை),
03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில், அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கண்ட சிறப்பு முகாம்களில்,

  • புதிய வாக்காளர் சேர்த்தல்

  • வாக்காளர் பெயர் நீக்கம்

  • வாக்காளர் விவரங்கள் திருத்தம்

  • பாகம் மற்றும் முகவரி மாற்றம்


ஆகிய பணிகளுக்காக படிவம் 6, 6A, 6B, 7, 8 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை வைக்கப்பட்டிருக்கும். மேலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மற்றும் வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள் முகாம்களில் பணியில் இருப்பார்கள்.


இதன்படி, தற்போது 18 வயது நிறைவடைந்த தகுதியுள்ள நபர்கள் மற்றும் 01.10.2026-ம் தேதிக்குள் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள், புதிய வாக்காளராக பதிவு செய்து கொள்ள படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, மேற்கண்ட முகாம்களில் சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தங்களது வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் முகாம் நடைபெறும் நாட்களில் நேரில் சென்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், இணைய வழியாகவும் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள “New Voters Registration” பக்கத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை. தவறான தகவல் அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வாக்காளர் பட்டியல் செம்மையாக தயாராகவும், வலுவான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கவும், வாக்களிப்பது நமது கடமை; அதற்காக வாக்காளராக பதிவு செய்து கொள்வோம் என திரு. ரெ. சதீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies