தருமபுரி, டிச.17:
தருமபுரி அரசு ஔவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் ஒன் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி மாது, பெற்றோர்–ஆசிரியர் கழக தலைவர் சந்திரமோகன், பெற்றோர்–ஆசிரியர் கழக பொருளாளர், தருமபுரி கிழக்கு நகர பொறுப்பாளர் நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கும், பள்ளிக்கு வருகை எளிதாகும் வகையிலும் தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எம்எல்ஏ பேசினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, தலைமை உதவி ஆசிரியர் முருகன், பள்ளி எஸ்.எம்.சி தலைவி, பெற்றோர்–ஆசிரியர் கழக உறுப்பினர்கள் டி.ஏ.குமார், எம்.ஏ.காசிநாதன், மாதேஷ், டி.பி.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்குவித்தனர். ஏராளமான மாணவிகள் விழாவில் பங்கேற்று மிதிவண்டிகளை பெற்றுக்கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)