தருமபுரி | டிசம்பர் 19:
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா, கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நகர பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, கௌதம் ஆகியோர் தலைமையேற்று, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஏ.கருணாநிதி, வீரமணி, வழக்கறிஞர் முத்துகுமார், முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், மாவட்ட கலை-இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் டி.ஏ.குமார், நகர கழக துணைச் செயலாளர் முல்லைவேந்தன், அன்பழகன், நகர மன்ற உறுப்பினர்கள் சம்பந்தம், வெல்டிங் ராஜா, பாண்டியன், அழகுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் ரவி, சேகர், ரஜினி, சேகரன், ஜெயபிரகாஷ், நெசவாளர் அணி காசிநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் அரசியல், கல்வி, சமூக சேவைகளை நினைவுகூர்ந்து பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

.jpg)