சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (CPIML) தருமபுரியில் நினைவு நிகழ்வை மரியாதையுடன் அனுசரித்தது. சமூகநீதி, மதச் சார்பற்ற தன்மை, வகுப்புவாத எதிர்ப்பு, மற்றும் இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை வலியுறுத்தும் நாளாக இந்நாள் கட்சி சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன், சி. பாலன், பொருளாளர் எ. அலமேலு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜி. பச்சா கவுண்டர், ஜி. ராஜகோபால், வெ. பை. மாதையன், என். பி. ராஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அம்பேத்கரின் சமூகப் புரட்சித் தத்துவங்களை நினைவு கூர்ந்தனர்.
மேலும் கோவிந்தன், மாணிக்கம், அம்பேத், சின்னசாமி, பிரபு, குப்புசாமி, ராஜா ஆகிய நிர்வாகிகள் முழக்கங்கள் எழுப்பி விழாவை முன்னெடுத்தனர். நிகழ்வில் கட்சியின் பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)