தருமபுரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் அரசு மருத்துவமனை அருகே உள்ள அவரது திருவுருவ சிலையில் மரியாதை செலுத்தும் நிகழ்வுடன் அனுசரிக்கப்பட்டது.
மைய மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சமூகநீதி, மனித உரிமை, சமத்துவம் பற்றிய அம்பேத்கரின் கொள்கைகளை நினைவு கூரும் வகையில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுரி மைய மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)