Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு.


தருமபுரி – டிச. 25:

தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பகுத்தறிவு பகலவன் என்றும் சமூகநீதியின் முன்னோடி என்றும் போற்றப்படும் ஈ.வி. ராமசாமி (பெரியார்) அவர்களின் 52-வது நினைவு தினம், சமூக நீதி நாள் ஆக அனுசரிக்கப்பட்டது.


இதனை முன்னிட்டு, தருமபுரி பெரியார் மன்றத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவச் சிலைக்கு, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமையில் நடைபெற்றது.


இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஜி. பச்சாகவுண்டர், ஜி. சம்பத், இராஜாமணி, மாது, செந்தில், வைகுந்தன், பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தந்தை பெரியாரின் சமத்துவம், சுயமரியாதை, சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி சார்ந்த கொள்கைகளை நினைவுகூர்ந்தனர்.


பெரியார் முன்வைத்த பகுத்தறிவு சிந்தனைகளும், சமூக சமத்துவத்திற்கான போராட்டங்களும் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பதாகக் கூறிய நிர்வாகிகள், அவரது கொள்கைகளை மக்களிடையே மேலும் பரப்பி செயல்படுத்த உறுதி எடுத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies