தருமபுரி – டிசம்பர் 25
தருமபுரி மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், அதிகப்பாடி ஊராட்சிக்குட்பட்ட 71 மற்றும் 72 ஆகிய பூத்துகளில் “என் வாக்கு சாவடி – வெற்றி வாக்கு சாவடி” என்ற தலைப்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் D. L. காவேரி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தருமபுரி முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி (Ex MLA) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர், தமிழக அரசின் நான்கரை ஆண்டு சாதனைகளான மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் வீடு, வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் மூலம், வருங்கால தேர்தல்களில் ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றும் நோக்குடன் கழகத்தின் தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

.jpg)