Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு.


தருமபுரி – டிசம்பர் 25

தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், மக்கள் இதயங்களில் நீங்கா இடம் பெற்ற தலைவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாள் நிகழ்ச்சி தருமபுரி குமாரசாமிபேட்டை மற்றும் வேடியப்பன் திட்டு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன், மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு செயலாளர் டாக்டர் ஆர். பாலு, மாவட்ட கழக அவைத் தலைவர் டி. முத்துசாமி, மாவட்ட பொருளாளர் மணிமேகலன், தருமபுரி நகர கழக செயலாளர் எஸ். பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும் ஒன்றிய கழக செயலாளர்கள் பி.டி. கணேசன், எஸ். பாஸ்கர், பன்னீர்செல்வம், எம். மகேந்திரவர்மன், பி.சி. ஞானம், கே.சி. கணேசன், எஸ். தங்கமணி, பி. முருகேசன், எம். முனிராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் டி.கே.ஆர். ரமேஷ்குமார், காந்தி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் போலீஸ் கிருஷ்ணன், கோகுல்ராஜ், மசியுல்லா, பெரியசாமி, வேலாயுதம், மாது, மாரிமுத்து, கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய கட்சி நிர்வாகிகள், ஏழை, எளிய மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த எம்ஜிஆரின் மக்கள் நலத் திட்டங்களும், சமூகநீதி சார்ந்த ஆட்சிமுறையும் தமிழக அரசியலில் என்றும் நினைவுகூரப்படும் என தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies