தருமபுரி | டிசம்பர் 28:
இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் கிராமத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூற்றாண்டு நிறைவு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
இலளிகம் தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு இல்லம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் கிளைச் செயலாளர் எல்.சி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். நூற்றாண்டு நிறைவு (UCPI) கொடியை கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தனது உரையில், பொதுவுடைமை இயக்கம் இந்தியாவின் சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமத்துவக் கோட்பாடுகளுக்காக ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்புகளை அவர் நினைவுகூர்ந்தார்.
நூற்றாண்டு நிறைவை ஒட்டி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாவட்ட பொருளாளர் அலமேலு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில், கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் என்.பி. ராஜி நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெ. காளியம்மாள், அம்பேத்கர், ராணி, மகேஸ்வரி, லட்சுமி, நீலா, குஷ்பு, சின்னசாமி, செந்தில், பிரபு, குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மறைந்த பொதுவுடைமை இயக்க தலைவர்களான எஸ்.ஏ. டாங்கே, பி.சி. ஜோஷி, சீனிவாசராவ், பகத்சிங், காத்தமுத்து, தா. பாண்டியன், ஆர். பச்சாகவுண்டர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

.jpg)