பாலக்கோடு | டிசம்பர் 27:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் அமானி மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
முகாமை மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால், ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, வெங்கடேசன், அரசு வழக்கறிஞர் பி.கே. முருகன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், செயற்குழு உறுப்பினர் குட்டி (எ) மோகன், இளைஞரணி மகேஷ்குமார், மாணவரணி சந்தர் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் முகாமை நேரில் பார்வையிட்டு, பயனாளிகளிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அவர் நேரில் மதிய உணவு வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி ராஜேஸ்வரி, நகர கவுன்சிலர்கள் முத்துசாமி, செழியன், ஒன்றிய துணைச் செயலாளர் அற்புதம் செந்தில், மல்லாபுரம் வெங்கடேசன், வெற்றிவேல், முருகேசன், மெடிக்கல் ராஜ்குமார், முருகன், இளைஞரணி மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இந்த “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம், கிராமப்புற மக்களின் மருத்துவ தேவைகளை நேரடியாகப் பூர்த்தி செய்யும் அரசின் முன்னோடியான திட்டமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

.jpg)