Type Here to Get Search Results !

தருமபுரியில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி | டிசம்பர் 27:

தருமபுரியில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து துறை சங்கங்களின் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் அசோக்குமார் மற்றும் சுகாதார செவிலியர் சங்கத் தலைவி செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான சிபிஎஸ் (CPS) முறையை முழுமையாக ஒழித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் தொகையையும், அரசின் பங்களிப்பு தொகையையும் வட்டியுடன் சேமநல நிதியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


அத்துடன், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


மேலும், அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரந்தர அரசு பணியிடங்களாக நிரப்ப வேண்டும் என்றும், அரசு பணியாளர்களின் மருத்துவ சிகிச்சைக்காக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் 50 சதவீத தொகையை உயர்த்தி, 100 சதவீத செலவினத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies