அரூர், டிச. 30:
அரூரில் சிட்கோ தொழிற்பேட்டை துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – சிபிஐ(எம்) சார்பில் அரூர் சட்டமன்றத் தொகுதி மக்கள் கோரிக்கை மாநாடு அரூர் ரவுண்டாணா அருகே வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாடு, சிபிஐ(எம்) தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பெ. சண்முகம் (சிபிஐ(எம்) மாநில செயலாளர்), செ. முத்து கண்ணன் (மாநில செயற்குழு உறுப்பினர்), பி. டில்லி பாபு, ஏ. குமார் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.
முக்கிய கோரிக்கைகள்:
-
அரூர் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை உடனடியாக அமைக்க வேண்டும்
-
உள்ளூர் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்
-
விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சிக்கு அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும்
-
அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்
மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள், அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் தொழில் வளர்ச்சி தடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் இளைஞர்கள் வேலை தேடி வெளியூருக்கு இடம்பெயரும் நிலை உருவாகியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர். இதனை மாற்ற அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த மக்கள் கோரிக்கை மாநாட்டில், சிபிஐ(எம்) கட்சியின் நிர்வாகிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை முழக்கமாக எழுப்பினர்.

.jpg)
