தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பு படிவம் அவசியம்!
-
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்து,
-
கையொப்பமிட்டு,
-
மீண்டும் BLO-விடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட படிவங்களில் உள்ள விவரங்களே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
படிவம் வழங்காதவர்கள் பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
படிவத்தை சமர்ப்பிக்கும் மாற்று வழிகள்
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை கீழ்க்காணும் அலுவலகங்களிலும் அளிக்கலாம்:
-
வட்டாட்சியர் அலுவலகம்
-
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
-
வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
BLO தொடர்பு எண்
ஒவ்வொரு படிவத்தின் மேற்பகுதியில் சார்ந்த BLO-வின் மொபைல் எண் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் 1950 என்ற தேசிய ஹெல்ப்லைனையும் தொடர்பு கொள்ளலாம்.
உதவி மைய எண்கள்
-
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 1950
-
தேர்தல் உதவி வாட்ஸ்அப் எண்: 94441 23456
-
வாக்காளர் பதிவு அலுவலர், தருமபுரி: 04342-260927
-
வாக்காளர் பதிவு அலுவலர், பாலக்கோடு: 04348-222045
-
வாக்காளர் பதிவு அலுவலர், பென்னாகரம்: 04342-255636
-
வாக்காளர் பதிவு அலுவலர், பாப்பிரெட்டிப்பட்டி: 04346-246544
-
வாக்காளர் பதிவு அலுவலர், அரூர்: 04346-296565
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள்,
"ஒவ்வொருவரும் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்த, வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை கட்டாயம் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)