2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தருமபுரி மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையிலும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அளூர் வட்டாட்சியர் அலுவலகங்களில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை கணினியில் பதிவேற்றும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கணக்கெடுப்பு படிவம் – கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டியது
04.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்கள்:
-
வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்,
-
கையொப்பமிட்டு,
-
மீண்டும் BLO-விடம் ஒப்படைக்க வேண்டும்.
பெறப்படும் படிவங்களில் உள்ள விவரங்களே வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
படிவத்தை ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
படிவங்களை சமர்ப்பிக்க இடங்கள்
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை:
-
வட்டாட்சியர் அலுவலகம்
-
கிராம நிர்வாக அலுவலகம்
-
வருவாய் ஆய்வாளர் அலுவலகம்ஆகிய இடங்களிலும் ஒப்படைக்கலாம்.
BLO தொடர்பு எண்
ஒவ்வொரு படிவத்தின் மேற்பகுதியில் சார்ந்த BLO-வின் மொபைல் எண் அச்சிடப்பட்டுள்ளது.
அதன் மூலம் 1950 உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்
வாக்காளர்கள் வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை:
-
சரியாக பூர்த்தி செய்து,
-
மீண்டும் BLO-விடம் ஒப்படைக்க,
-
சிறப்பு திருத்தப் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது உடனிருந்தவர்கள்:
-
அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. செம்மலை
-
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. மு. கதிரேசன்
-
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் திரு. சின்னா
-
அரூர் வட்டாட்சியர் திரு. பெருமாள்மற்றும் பல தொடர்புடைய அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)