தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் முழுமையாக இலவசம். இதன் மூலம் தனியார்துறையில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தேடும் பணியிடங்கள்
பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கீழ்காணும் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன:
-
விற்பனையாளர்
-
மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ்
-
சூப்பர்வைசர்
-
மேலாளர்
-
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்
-
அக்கவுண்டன்ட்
-
மெக்கானிக்மற்றும் பல...
தேவைப்படும் கல்வித்தகுதிகள்
-
பள்ளிப்படிப்பு
-
டிப்ளமோ
-
பட்டப்படிப்பு
என அனைத்து தகுதிகளும் உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி & இடம்
-
தேதி: 21.11.2025 (வெள்ளிக்கிழமை)
-
நேரம்: காலை 10.00 மணி
-
இடம்: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து வேலை தேடுபவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)